search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன்-ரேட்டை கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தினோம்: நியூசி. வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி சொல்கிறார்
    X

    ரன்-ரேட்டை கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தினோம்: நியூசி. வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி சொல்கிறார்

    கொல்கத்தா டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்க விடாமல் நெருக்கடி கொடுத்தால் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்பதை உறுதியாக நாங்கள் தெரிந்திருந்தோம்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போதைய நிலையில் நியூசிலாந்து வலுமையான நிலையில் உள்ளது.

    நாளை காலை விரைவில் இந்தியாவின் விக்கெட்டுக்களை நியூசிலாந்து அணி வீழ்த்தி வி்ட்டால் இந்த டெஸ்டில் இந்தியா பின்தங்க வாய்ப்புள்ளது.

    இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணற வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார். தவான் 1, முரளி விஜய் 9 மற்றும் அஸ்வின் ஆகியோரை விரைவில் வெளியேற்றினார். இதனால் இந்தியா ரன் குவிக்க இயலாமல் போனது.

    இன்றைய ஆட்டம் குறித்து ஹென்றி கூறுகையில் ‘‘இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய பணி மிகவும் அபாரமாக இருந்தது. ரன்-ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தால் அதன்மூலம் இந்தியாவின் விக்கெட்டுக்களை உறுதியாக வீழ்த்தலாம் என்று நாங்கள் தெரிந்திருந்தோம்.

    ஏனென்றால், ஆடுகளம் விக்கெட்டுக்கள் வீழ்த்துவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆடுகளம் நீண்ட நேரம் மூடி வைக்கப்பட்டிருந்ததால் புதிய பந்தில் பந்து வீசுவது முக்கியமான விஷயம் என்று எங்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் அந்த பகுதி ஆட்டத்தின் முக்கியமானதாக சென்று கொண்டிருந்தது.

    போட்டி நடக்கும்வரை இந்த ஆடுகளத்தின் நிலைமை குறித்து சரியாக கணிக்க முடியவில்லை. ஆகவே, பந்து கைக்கு வந்த பின்னர்தான் நாம் ஆட்டத்தை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டோம். ஆடுகளத்தின் மேற்பரப்பு நல்ல நிலைமைக்கு (பேட்டிங் செய்ய சாதகமாக) வந்தபோது பந்து வீச கடினமாக இருந்தது. எங்களால் விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாத நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க சிறந்த வழியைத் தேட வேண்டியிருந்தது.

    நாளை காலை ஏராளமான டாட்ஸ் (ரன் அடிக்காத) பந்துகள் வீசி அழுத்தம் கொடுப்போம். நாளை காலை ஆட்டம் எங்களுக்கு முக்கியமான பகுதி’’ என்றார்.
    Next Story
    ×