search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட் போட்டியில் காம்பீருக்கு வாய்ப்பு இல்லை: 2 விக்கெட்டை விரைவில் இழந்தது இந்தியா
    X

    2-வது டெஸ்ட் போட்டியில் காம்பீருக்கு வாய்ப்பு இல்லை: 2 விக்கெட்டை விரைவில் இழந்தது இந்தியா

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துள்ளது.
    கொல்கத்தா:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவானும், உமேஷ் யாதவுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் டெஸ்டை போலவே 4 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கியது.

    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு டெய்லருக்கு வழங்கப்பட்டது. வில்லியம்சன் இடத்தில் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கலாம். அந்த அணியில் மார்க்கிரேக், ஜோதி ஆகியோருக்கு பதில் ஜிதன் பட்டேல், மெட் ஹென்றி ஆடும் லெவனில் இடம் பெற்றனர்.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக ஷிகர் தவான், முரளி விஜய் களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில்  மட்டுமே எடுத்த நிலையில், ஹென்றியிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்து நிதானமாக விளையாடினார். ஆனால், மறுமுனையில் முரளி விஜய் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி இணைந்துள்ளார்.

    நல்ல பார்மில் இருக்கும் வில்லியம்சன் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். இப்போட்டியில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால் எதிரணியை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதே அவரது இலக்கு.

    எனவே, இன்றைய ஆட்டத்தின்போது கணிசமான ரன்கள் எடுப்பதுடன் மேலும் விக்கெட் விழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×