search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு ஹாலெப் தகுதி
    X

    சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு ஹாலெப் தகுதி

    சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு ஹாலெப் தகுதி பெற்றுள்ளார்.
    யுஹான்: 

    யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் மேடிசன் கீசை (அமெரிக்கா) சாய்த்து அரைஇறுதியை எட்டினார். 

    இதன் மூலம் சிங்கப்பூரில் அடுத்த மாதம் (அக்டோபர்) நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு தொடர்ந்து 3-வது ஆண்டாக ஹாலெப் தகுதி பெற்றார். ஏற்கனவே ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் இந்த சாம்பியன்ஷிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். 
    Next Story
    ×