search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட், ஒருநாள் என இரண்டு வகையில் வீரர்களின் ஒப்பந்த முறையை கொண்டு வந்தது இங்கிலாந்து
    X

    டெஸ்ட், ஒருநாள் என இரண்டு வகையில் வீரர்களின் ஒப்பந்த முறையை கொண்டு வந்தது இங்கிலாந்து

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு முறையில் வீரர்களின் ஒப்பந்த முறையை கொண்டு வந்துள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கும். தற்போது இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரும், 2019-ல் உலகக்கோப்பை தொடரும் இங்கிலாந்தில் நடைபெற இருப்பதால் ஒருநாள் தொடருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வீரர்களின் ஒப்பந்தத்தை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கென தனித்தனி முறையாக கொண்டு வந்துள்ளது.

    அதன்படி 2016-17-க்கான டெஸ்ட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் 1. மொயீன் அலி, 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. பேர்ஸ்டோவ், 4. ஸ்டூவர்ட் பிராட், 5. அலைஸ்டர் குக், 6. ஸ்டீவன் பின், 7. ஜோ ரூட், 8. பென் ஸ்டோக்ஸ், 9. கிறிஸ் வோக்ஸ், 10. மார்க் வுட்.

    ஒருநாள் போட்டிக்கான ஒப்பந்தத்தில் 1. மொயீன் அலி, 2. ஜோஸ் பட்லர், 3. அலெக்ஸ் ஹேல்ஸ், 4. இயான் மோர்கன், 5. லியாம் பிளங்கெட், 6. ஜோ ரூட், 7. ஜேசன் ராய், 8. அடில் ரஷித், 9. பென் ஸ்டோக்ஸ், 10. கிறிஸ் வோக்ஸ், 11. டேவிட் வில்லே.

    இவர்கள் ஒப்பந்தம் அக்டோபர் 1-ந்தேதி முதல் 12 மாதம் செல்லுபடியாகும்.
    Next Story
    ×