search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U18 ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி
    X

    U18 ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி

    வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 18 வயதிற்குபட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    வங்காளதேச தலைநகர் டாக்காவில் 18 வயதிற்குபட்டோருக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கிய பின்னரும் இந்தியாவின் கையே ஓய்கியது. மேலும், ஒரு கோல் அடித்து வலுவான நிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் பாகிஸ்தான் ஒரு கோல் அடித்தது. இதனால் இந்தியா 3-1 என பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதியில் சீன தைபே அணியை வங்காள தேசம் 6-1 என வீழ்த்தியது. இதனால் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×