search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் நீச்சல்: 19 ஆண்டு சாதனையை தகர்த்த கர்நாடக வீராங்கனை
    X

    தேசிய சீனியர் நீச்சல்: 19 ஆண்டு சாதனையை தகர்த்த கர்நாடக வீராங்கனை

    தேசிய சீனியர் நீச்சல் போட்டியில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால் 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 19 ஆண்டு கால சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
    ராஞ்சி :

    70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடந்தது. இதில் பெண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால் 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையையும் படைத்தார். 

    இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 19 ஆண்டு கால சாதனையை சலோனி தலால் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். 
    Next Story
    ×