search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது
    X

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
    கவுகாத்தி :

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கவுகாத்தியில், 1-ந் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள்(இரவு 7 மணி) மோதுகின்றன. 

    முதலாவது ஆட்டத்திற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவும் நடைபெறுகிறது. இந்தி சினிமா நட்சத்திரங்கள் அலியா பாத், ஜேக்குலின் பெர்னாண்டஸ், வருண் தவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். ஐ.எஸ்.எல். அணியின் உரிமையாளர்களான தெண்டுல்கர், டோனி, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. டிக்கெட் வாங்க கவுகாத்தி ஸ்டேடியத்துக்கு நேற்று நேரில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டிக்கெட் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த சில ரசிகர்கள் மைதானத்துக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர். 
    Next Story
    ×