search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஆக்கி: அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
    X

    ஆசிய கோப்பை ஆக்கி: அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

    18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதுகிறது.
    டாக்கா:

    18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரைஇறுதியில் (பிற்பகல் 3 மணி) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

    பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் சீன தைபே, சீனா, ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து அரை இறுதியை எட்டியது. இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் தொடக்க லீக்கில் வங்காளதேசத்திடம் தோல்வி கண்டாலும், அடுத்த லீக் ஆட்டத்தில் 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை விரட்டி அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×