search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்டிலும் நீஷம் ஆடமாட்டார்: நியூசிலாந்து பயிற்சியாளர் தகவல்
    X

    2-வது டெஸ்டிலும் நீஷம் ஆடமாட்டார்: நியூசிலாந்து பயிற்சியாளர் தகவல்

    நாளை கொல்கத்தாவில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் நீஷம் ஆடமாட்டார் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா :

    விலாபகுதியில் ஏற்பட்ட காயத்தால் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆடாத நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் நாளை கொல்கத்தாவில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் அவர் ஆடமாட்டார் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் நேற்று தெரிவித்தார். 

    இதற்கிடையே, காயத்தால் விலகிய சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிரேக்குக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஜீத்தன் பட்டேலின் இந்திய வருகை தாமதம் ஆகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவர் கிளம்ப வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், இன்று தான் அவர் கொல்கத்தாவுக்கு வந்து சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உடனடியாக களம் இறக்கப்படுவாரா என்பது சந்தேகம் தான். 
    Next Story
    ×