search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
    X

    பாகிஸ்தான் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

    பாகிஸ்தான் அணியுடன் மோதும் 3 டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 டெஸ்ட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 13-ந்தேதி துபாயில் தொடங்கியது.

    டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுழந்பந்து வீரர் ஜோமல் வாரிக்கன் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 4 டெஸ்டில்தான் ஆடி உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் வருமாறு:-

    ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெயிட் (துணை கேப்டன்), சாமுவேல்ஸ், டாரன் பிராவோ, தேவேந்திரபிஷு, பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ், கும்மின்ஸ், டவுரிச், கேப்ரியல், ஹோப், லியான் ஜான்சன், அல்ஜாரி ஜோசப், வாரிக்கன்.
    Next Story
    ×