search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏபி டி வில்லியர்ஸூக்கு அடுத்த வாரம் ஆபரேசன்: ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகல்
    X

    ஏபி டி வில்லியர்ஸூக்கு அடுத்த வாரம் ஆபரேசன்: ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகல்

    ‘360’ டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வி்ல்லியர்ஸ் முழங்கால் காயத்திற்காக அடுத்த வாரம் ஆபரேசன் செய்ய உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியது கிடையாது. கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது.

    இந்த தொடருக்கு முன் டி வில்லியர்ஸின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் முதன்முறையாக நியூசிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்து காயம் காரணமாக விலகினார். அவரது காயம் குணமடைய சுமார் நான்கைந்து வாரங்கள் ஆகும் என்று கூறப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணி வருகிற 30-ந்தேதியில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியில் டி வில்லியர்ஸ் இடம்பிடித்திருந்தார். இன்று காலை டிவில்லியர்ஸ் தனது உடல்தகுதியை நிரூபிக்கும்போது காயம் ஏற்பட்ட இடத்தில் வலி ஏற்பட்டதாக உணர்ந்தார்.

    இதனால் அடுத்த வாரம் ஆபரேசன் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்பின் குறைந்தது 8 வாரங்கள் அல்லது 10 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும், தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்தும் டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்.
    Next Story
    ×