search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்: அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
    X

    ஒருநாள் கிரிக்கெட்: அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 30-ந்தேதி தொடங்குகிறது. அதற்குமுன் இரண்டு அணிகளும் அயர்லாந்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் விளையாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிக்கெதிரான போட்டி ஏற்கனவே முடிந்து விட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

    இன்று ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 43.5 ஓவரில் 198 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ஸ்டிர்லிங் (30), ஆண்டர்சன் (39), போர்ட்டர்பீல்டு (24) ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஜம்பா 3 விக்கெட்டும், ஹாஸ்டிங் மற்றும் போலந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜா, வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். வார்னர் 38 பந்தில் 48 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து கவாஜாவுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி 30.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. கவாஜா 82 ரன்களும், ஸ்மித் 59 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
    Next Story
    ×