search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வினை பெற்றிருப்பது இந்திய அணிக்கு பெரிய அதிர்ஷ்டம்: வக்கார் யூனிஸ் சொல்கிறார்
    X

    அஸ்வினை பெற்றிருப்பது இந்திய அணிக்கு பெரிய அதிர்ஷ்டம்: வக்கார் யூனிஸ் சொல்கிறார்

    ஆல்-ரவுண்டர் பணியை திறமையாக செய்து வரும் அஸ்வினை பெற்றிருப்பது இந்தியாவின் பெரிய அதிர்ஷ்டம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 10 வி்க்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    2-வது இன்னிங்சில் கேன் வில்லியம்சனை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 37 போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் மற்றும் உலக அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சார் வக்கார் யூனிஸ் மற்றும் டென்னிஸ் லில்லி ஆகியோர் 38 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி 2-வது இடத்தில் இருந்தனர். அவர்களை தற்போது அஸ்வின் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

    அபாரமாக பந்து வீசி வரும் அஸ்வினை வக்கார் யூனிஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், அஸ்வின் குறித்து அவர்கூறுகையில் ‘‘அறிவார்ந்த பந்து வீச்சாளரான அஸ்வினை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது சாதனைகள் அபாரமானது.

    அவர் விக்கெட்டுக்கள் மட்டும் எடுக்கவில்லை. ரன்களும் குவித்து வருகிறார். அவருடைய ஆல்-ரவுண்டர் பணி மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த சாதனையை எட்டியதற்காக நான் மகிழ்ச்சி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது அவருக்கு அதிக வயதில்லை. இதனால் இன்னும் நீ்ண்ட காலம் விளையாடுவார். அவரால் ஏராளமான உலக சாதனைகளை முறியடிக்க முடியும். ஆல் ரவுண்டர் திறன் கொண்ட அஸ்வினை பெற்றிருப்பது இந்திய அணிக்கு பெரிய அதிர்ஷ்டம்’’ என்றார்.

    87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வக்கார் யூனிஸ் 373 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×