search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் டி20 லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஒப்பந்தம் ஆனார் இந்திய வீராங்கனை
    X

    பிக் பாஷ் டி20 லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஒப்பந்தம் ஆனார் இந்திய வீராங்கனை

    ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்திய இளம் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா.
    இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வருட தொடக்கத்தில் இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கியது.

    அதன்படி முதல் வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் பிக் பாஷ் தொடரில் இடம்பிடித்து சாதனைப் படைத்தார். அதன்பின் தற்போது 2-வது வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தானா பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட இருக்கிறார். இவரை பிரிஸ்பேன் ஹீட் என்ற அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    20 வயதாகும் ஸ்மிரிதி மந்தானா கடந்த சில வருடங்களாக வளர்ந்து வரும் வீராங்கனையாக ஜொலித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிரிதி 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்தார்.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்காற்றினார். இந்த வருடம் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 183 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 95.81 ஆகும். ஒட்டுமொத்தமாக 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 321 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 99.06 ஆகும். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதுகுறித்து ஸ்மிரிதி மந்தானா கூறுகையில், ‘‘பிக் பாஷில் இடம்பிடித்திருப்பது சிறந்ததாக உணர்கிறேன். பிரிஸ்பேன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ஷ்டம். மேலும் பிக் பாஷ் தொடரில் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இளம் வயதில் இதுபோன்ற தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்ததன் மூலம், நல்ல அனுபவத்தை பெற்று வருங்காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×