search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகியாக வேண்டுமா? - எழுத்துத் தேர்வு எழுதினால் போதும்
    X

    ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகியாக வேண்டுமா? - எழுத்துத் தேர்வு எழுதினால் போதும்

    ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்ய இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளில் பலர் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாகத்தான் இருப்பார்கள். மேலும், நிர்வாகிகள் தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    ஆனால், தற்போது ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் பதவிக்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அக்டோபர் 16-ந்தேதி நடக்க இருக்கிறது.

    இந்த எழுத்துத் தேர்வை நியாயப்படுத்தியுள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் அபிதாப் சவுத்ரி, ‘‘இந்த முடிவு பொதுக்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. இது வெளிப்படையான வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாதாரண மனிதனுக்கும் வாய்ப்பு கிடைக்க வழி செய்யும்’’ என்றார்.
    Next Story
    ×