search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை நெருங்கும் அஸ்வின், கேன் வில்லியம்சன்
    X

    டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை நெருங்கும் அஸ்வின், கேன் வில்லியம்சன்

    ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் அஸ்வின் முதல் இடத்தை நெருங்குகிறார். அதேபோல் பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தை நெருங்குகிறார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆண்டர்சனை 3-வது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அஸ்வின் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 870 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    தற்போது தென்ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் 878 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கும் அஸ்வினுக்கு இடையில் 7 புள்ளிகள்தான் வித்தியாசம் உள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினால் முதல் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடத்திற்கு அஸ்வின் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் 75 ரன்னும், 2-வது இன்னிங்சில் 25 ரன்னும் எடுத்ததால் ஜோ ரூட்டை 3-வது இடத்திற்கு தள்ளிவிட்டு 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் முதல் 2-வது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 906 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கும் வில்லியம்சனுக்கும் இடையே 27 புள்ளிகள்தான் வித்தியாசம் உள்ளது. கொல்கத்தா மற்றும் கடைசி டெஸ்டில் வில்லியம்சன் சிறப்பான ஆடினால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

    ஆல்-ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் 450 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். வங்காள தேச வீரர் சாஹிப் அல் ஹசன் 384 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜடேஜா 292 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×