search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்றால் இந்தியா நம்பர்-1 இடத்திற்கு முன்னேறும்
    X

    கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்றால் இந்தியா நம்பர்-1 இடத்திற்கு முன்னேறும்

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஈடன் கார்டனில் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறும்.
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கை - ஆஸ்திரேலியா, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் ஐ.சி.சி.யின் தரவரிசை நிர்ணயிக்கப்படும் என்ற நிலைமை ஏற்பட்டது.

    நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா இலங்கை அணிக்கெதிராக 0-3 என தோல்வியடைந்ததால் முதல் இடத்தை இழந்தது.

    அதன்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி பெற்று, பாகிஸ்தான் - இங்கிலாந்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தால் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும். மாறாக இந்தியா 3 போட்டிக்கு கீழ் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் என்ற நிலைமை இருந்தது.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி மழையால் டிரா ஆனது. இதனால் இந்தியா முதல் இடத்தை இழந்தது. பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இந்தியா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.

    தற்போது இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் முதல் இடத்தைப் பிடிக்கும். அதன்பின் நடைபெறும் 3-வது போட்டியில் இந்தியா தோல்வியடையாமல் இருந்து பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை 3-0 என வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தாலும் இந்தியா முதல் இடத்திலேயே நீடிக்கும்.

    அதன்பின் இந்தியாவிற்கு தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. இதனால் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×