search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-வது முறையாக 10 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்
    X

    5-வது முறையாக 10 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்

    5-வது முறையாக 10 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை செய்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 2-வது இன்னிங்சில் நேற்று முன்தினம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் குறைந்த டெஸ்டில் (37 டெஸ்ட்) 200 விக்கெட்டுகள் சாய்த்த முதல் இந்திய வீரர் மற்றும் 2-வது சர்வதேச வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். 

    இந்த நிலையில் நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அஸ்வின் மேலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை தன்வசமாக்கினார். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் அஸ்வின் வீழ்த்துவது இது 19-வது முறையாகும். ஒட்டு மொத்தத்தில் இரண்டு இன்னிங்சிலும் சேர்ந்து அவர் இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுகளை அள்ளினார். 

    ஒரு டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை சுருட்டுவது இது 5-வது தடவையாகும். இதேபோல் இந்திய வீரர் ஹர்பஜன்சிங் (103 டெஸ்ட்) 5 முறை 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் கும்பிளே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் (132 டெஸ்ட்) 8 முறை வீழ்த்தியதே அதிகபட்சமாகும். 
    Next Story
    ×