search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வினுடன் இணைந்து சிறப்பாக பந்து வீசும் ரகசியம்: விவரிக்கிறார் ஜடேஜா
    X

    அஸ்வினுடன் இணைந்து சிறப்பாக பந்து வீசும் ரகசியம்: விவரிக்கிறார் ஜடேஜா

    அஸ்வினுடன் இணைந்து ஜடேஜா இந்தியாவில் அபாரமாக பந்து வீசி வருகிறார். இதன் ரகசியத்தை தற்போது அவர் விவரித்துள்ளார்.
    கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் அவுட்டாகாமல் 42 ரன்னும், ஐந்து விக்கெட்டுக்களும் கைப்பற்றிய ஜடேஜா 2-வது இன்னிங்சில் அவுட்டாகாமல் 50 ரன்னும், 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இதனால் ஜடேஜாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய மண்ணில் ஜடேஜா அஸ்வின் உடன் இணைந்து அபாரமாக பந்து வீசி வருகிறார். இதன் ரகசியத்தை விவரித்தார் ஜடேஜா. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. பேட்டிங் வாய்ப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். களத்தில் இறங்கியபின் எனக்குநானே கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால், அதன்பின் வழக்கமான என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். துலீப் இறுதிப் போட்டி எனக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. நான் அந்த போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். இதுபோன்ற ஆடுகளம் மற்றும் டர்னிங் ஆடுகளத்தை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன்.

    முதல் இன்னி்ங்சில் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. அதனால் பந்தை மெதுவாகவும், வேகமாகவும் கலந்து வீச முயற்சி செய்தோம். உண்மையிலேயே ஸ்லோ ஆடுகளத்தில் அஸ்வின் மிகவும் சிறப்பு வாய்ந்த பந்து வீச்சாளர். 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவருடன் இணைந்து மகிழ்ச்சியாக அனுபவித்து பந்து வீசுகிறேன். எப்போதெல்லாம் விக்கெட் விழாமல் இருக்கிறதோ, அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம். முதல் இன்னிங்சில் வில்லியம்சன் பேட்டிங் செய்யும்போது அவருக்கு ஸ்டம்பிற்கு வலது புறத்தில் இருந்து, அல்லது இடது புறத்தில் இருந்து பந்து வீசவேண்டுமா? என்பது பற்றி பேசிக் கொண்டோம். இதேபோல் வேகமாக வீச வேண்டுமா? அல்லது மெதுவாக வீசவேண்டுமா? என்பது போன்ற பல திட்டங்கள் குறித்து பேசிக்கொள்வோம்’’ என்றார்.
    Next Story
    ×