search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைநிலை வீரர்களின் பேட்டிங்தான் வெற்றிக்கு முதுகெலும்பு: விராட் கோலி சொல்கிறார்
    X

    கடைநிலை வீரர்களின் பேட்டிங்தான் வெற்றிக்கு முதுகெலும்பு: விராட் கோலி சொல்கிறார்

    கடைநிலை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து வீரர்களுக்கு மனரீதியிலான அழுத்தத்தை உருவாக்கினார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
    கான்பூரில் இன்று முடிவடைந்த 500-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டானதும், இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த அஸ்வின் 40 ரன்னும், ஜடேஜா அவுட்டாகாமல் 42 ரன்னும் சேர்த்தனர். கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய உமேஷ் யாதவ் 9 ரன்கள் மட்டுமே சேர்த்தாலும், ஜடேஜாவுடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்க உதவி புரிந்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.

    பந்து வீச்சில் இந்தியா ஜொலித்தாலும் இந்த மூவரின் பேட்டிங்தான் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்திய அணியின் வெற்றிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான விஷயத்தில் ஒன்று வலிமையான கடைநிலை வீரர்கள் பேட்டிங்கில் பங்களிக்க முடியும் என்பதுதான். ஒரு பகுதியில் நாம் பந்து வீச்சாளர்களுடன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது அஸ்வின் உள்பட ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க விரும்பினார்கள். அதனால் உளவியல் ரீதியான அழுத்தத்தை நியூசிலாந்து அணி மீது வைத்தோம்.

    அவர்கள் எங்களை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், நாம் 340 முதல் 360 ரன்களை நோக்கி செல்லும்போது எதிர்அணியிடம் இருந்து உத்வேகம் அப்படியே மாறியது. அந்தப் பகுதியி்ல் நாம் முன்னேற்றம் அடைந்து, அதற்கான கடின பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடும்போது இந்த 40- 50 ரன்கள் முக்கிய பங்குவகிக்கும்.

    பேட்ஸ்மேன்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சில தருணங்கள் சங்கடத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் பேட்டிங் செய்யும்போது உத்வேகத்துடன் விளையாடினோம். ஆனால், சில தவறான ஷாட்டுகள் மூலம் அவுட் ஆகி பின்தங்கினோம். ஆனால் ஜடேஜா, அஸ்வின் சிறப்பாக பேட்டிங் செய்தனர். உமேஷ் யாதவ் ஜடேஜாவுடன் சேர்ந்து நல்ல ஜோடி அமைத்தார். இது உளவியல் ரீதான மாற்றத்தை உருவாக்கியது’’ என்றார்.
    Next Story
    ×