search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து கவுண்டி அணியின் முன்னாள் வீரர் நியமனம்
    X

    இலங்கை அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து கவுண்டி அணியின் முன்னாள் வீரர் நியமனம்

    இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து கவுண்டி அணியின் 32 வயதான முன்னாள் பேட்ஸ்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இலங்கை அணியின் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக இங்கிலாந்து கவுண்டி அணியான ஹாம்சையர் அணிக்காக விளையாடிய மைக்கேல் மைன் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

    சமீபத்தில் ஆஸ்திரேலியா அணி இலங்கை சென்று விளையாடியது. இந்த தொடர் முடிந்த பின்னர் மைன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் மைனுக்குப் பதிலாக நிக் லீ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதத்தில் இருந்த தனது பணியை மேற்கொள்வார். 32 வயதான லீ, கென்ட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆவார்.
    Next Story
    ×