search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசி. சுழற்பந்து வீச்சாளர் கிரேக் இந்தியாவிற்கு எதிரான எஞ்சிய டெஸ்டில் இருந்து விலகல்
    X

    நியூசி. சுழற்பந்து வீச்சாளர் கிரேக் இந்தியாவிற்கு எதிரான எஞ்சிய டெஸ்டில் இருந்து விலகல்

    கான்பூர் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரேக் காயம் காரணமாக எஞ்சிய டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முடிவடைந்த கான்பூர் டெஸ்டில் இந்தியா இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்களில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிரேக்கும் ஒருவர். இந்த போட்டியின்போது அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இதனால் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜீத்தன் பட்டேல் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பட்டேல் நியூசிலாந்து அணியில் கடைசியாக 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பிடித்திருந்தார். அதன்பின் மூன்றரை ஆண்டுகள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கிரேக் கான்பூர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 139 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார். அத்துடன் முதல் இன்னிங்சில் 2 ரன்களும், 2-வது இன்னிங்சில் 1 ரன்னும்தான் எடுத்தார்.
    Next Story
    ×