search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்டில் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை
    X

    டெஸ்டில் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை

    கான்பூர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 262 ரன்னில் சுருண்டது. கடைசி 8 ரன்னில் 5 விக்கெட்டுக்களை இழந்தது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    இந்த போட்டிக்கு முன் அஸ்வின் 36 போட்டிகளில் 193 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் 197 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

    2-வது இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் குப்தில் (0), லாதம் (2) அடுத்தடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தனர். அதன்பி்ன் வந்த வி்ல்லியம்சன் 25 ரன்னில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    அத்துடன் விரைவாக 200 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் கிரிமெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். லில்லி, வக்கார் யூனிஸ் ஆகியோர் 38 போட்டிகளிலும், டேல் ஸ்டெயின் 39 போட்டிகளிலும் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×