search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்கு

    கான்பூர் டெஸ்டில் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 262 ரன்னில் சுருண்டது.

    56 ரன்களுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 64 ரன்னுடனும், புஜாரா 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் 76 ரன்னிலும், புஜாரா 78 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த பிராட் கோலி 18 ரன்னும், ரகானே 40 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இந்தியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்னகள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 68 ரன்னுடனும், ஜடேஜா 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், இந்தியா நியூசிலாந்தை விட மொத்தமாக 433 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 434 ரன்கள் இலக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×