search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம்
    X

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம்

    தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்
    கராச்சி:

    காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்து இருந்தார்.

    தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.

    அனுராக் தாக்கூரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியதாவது:-

    அனுராக் தாக்கூரின் அறிக்கையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானுடன் விளையாட விரும்பவில்லை என்பதை இந்தியா ஏற்கனவே முடிவு எடுத்து விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்பு வைத்து இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் சுழற்பந்து வீரர் அப்துல் காதிர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே அரசியலை விட்டு விலகி நிற்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியலுடன் தான் இருக்கிறது.

    பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நேரடி தொடரில் விளையாடவில்லை. இதனால் அனுராக்தாக்கூரின் அறிக்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்வது பற்றி பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×