search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி இறுதிப் போட்டிக்கு தகுதி
    X

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி இறுதிப் போட்டிக்கு தகுதி

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி, ரட்வன்ஸ்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    ஒரு அரையிறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி - ரட்வன்ஸ்கா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் முதல் செட்டை 4-6 என இழந்த வோஸ்னியாக்கி, 2-வது செட்டை 7-5 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றினார்.

    இதனால் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க ஓபனில் வோஸ்னியாக்கி அரையிறுதி வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் உள்ளூர் வீராங்கனை ஒசாகா, ஸ்விடோலினாவை எதிர்கொள்கிறார். இதில் வெற்றிபெறும் வீராங்கனையுடன் வோஸ்னியாக்கி இறுதிப் போட்டியில் மோதுவார்.
    Next Story
    ×