search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாதம்- வில்லியம்சன் ஜோடி 6 முறையாக 100 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை
    X

    லாதம்- வில்லியம்சன் ஜோடி 6 முறையாக 100 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை

    கான்பூர் டெஸ்டில் லாதம்- வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்த ஜோடி 6-வது முறையாக 100 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் லாதம் உடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.

    இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் டெஸ்டில் இந்த ஜோடி 6-வது முறை 100 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்தது. இந்த 124 ரன்களும் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
    Next Story
    ×