search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது பாகிஸ்தான்
    X

    முதல் டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது பாகிஸ்தான்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்லஸ், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 1 ரன் எடுத்த நிலையில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் பந்தில் ஆட்டம் இழந்தார். சார்லஸ் 7 ரன்களில் மொகமது நவாஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அதன்பின் வந்த வீரர்கள் இமாத் வாசிம் பந்தில் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருந்தார்கள். பிளெட்சர் 2 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் இமாத் வாசிம் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    வெயின் பிராவோ மட்டும் ஒரளவிற்கு தாக்குப்பிடித்து 55 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் 115 ரன்கள் எடுத்து சுருண்டது. இமாத் வாசிம் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.



    அதன்பின் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 14.2 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 116 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார பெற்றி வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த காலித் லத்தீப் (34), பாபர் அசாம் (55) சிறப்பாக விளையாடி அணியை பெற்றி பெற வைத்தனர்.

    இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.
    Next Story
    ×