search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூர் டெஸ்ட்: மழை குறுக்கீட்டால் தேனீர் இடைவேளையுடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது
    X

    கான்பூர் டெஸ்ட்: மழை குறுக்கீட்டால் தேனீர் இடைவேளையுடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

    கான்பூர் டெஸ்டில் 2-வது நாள் தேனீர் இடைவேளையின்போது மழை குறுக்கீட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    அதன்பின் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் குப்தில் 21 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த லாதம், கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் அடித்தனர்.

    நியூசிலாந்து அணி 2-வது நாள் தேனீர் இடைவேளையின்போது 47 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேலும், மழை தொடர்ந்து பெய்தாலும், மைதானத்தின் பவுண்டரி லைன் அருகே மழைநீர் தேங்கி நின்றதாலும் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

    கேன் வில்லியம்சன் 65 ரன்னுடனும், டாம் லாதம் 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×