search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் ஒருநாள் அணி கேப்டன் பதவிக்கும் ஆபத்து இருந்தது: சந்தீப் பட்டீல்
    X

    டோனியின் ஒருநாள் அணி கேப்டன் பதவிக்கும் ஆபத்து இருந்தது: சந்தீப் பட்டீல்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இருந்தவர் சந்தீப் பட்டீல். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இவர், டோனி டெஸ்டில் இருந்து விலகும்போது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது என்றார்.
    இந்திய தேசிய அணியின் தலைமை தேர்வாளராக இருந்தவர் சந்தீப் பட்டீல். இவரது பதவிக் காலத்தில் இரண்டு முக்கிய விஷங்கள் நடந்தன. ஒன்று சச்சின் தெண்டுல்கர் ஓய்வு. மற்றொன்று டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது.

    சச்சின் ஓய்வு குறித்து ஏதும் பேச மறுத்துவிட்ட பட்டீல், டோனி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவி குறித்து ஏராளமாக விவாதங்கள் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

    மேலும், டோனி ஓய்வு குறித்து கூறுகையில் ‘‘கடந்த 2014-ம் ஆண்டின் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி திடீரென தொடரின் பாதியில் இருந்து ஓய்வு பெற்றார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின் அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவி குறித்து விவாதிக்கப்பட்டது.

    உண்மையாகவே டோனியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து இருந்தது. அங்கே பலமுறை இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆனால், நாங்கள் அவரை ஒருநாள் அணியின் கேப்டனாக நீட்டித்தோம். ஏனென்றால், அந்த நேரத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வந்தது. உலக்ககோப்பைக்கு சற்று முன் புதிய நபருக்கு கேப்டன் பதவியை கொடுக்க முயற்சி செய்தால், அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பு தேர்வாளர்களுக்கு கிடைக்கவில்லை. இதை பரிசோதனை செய்து பார்க்கும் நேரமும் எங்களுக்கு போதுமானதாக இல்லை.

    டோனியின் ஓய்வு முடிவு திடீரென எடுத்ததுதான். ஆனால், அவரது எதிர்காலத்திற்காக அந்த முடிவு சிறந்ததாக இருந்தது. அப்போது கடினமான தொடர் என்பதால் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நம்முடைய வீரர்கள் மிகவும் கடினமான நிலையை எதிர்கொண்டார்கள். விராட் கோலியை காப்பாற்றுவதற்கான அவர்கள் செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை’’ என்றார்.
    Next Story
    ×