search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் வோஸ்னியாக்கி
    X

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் வோஸ்னியாக்கி

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவ்ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
    டோக்கியோ :

    பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7-6 (7-4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவ்ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். 

    மற்றொரு ஆட்டத்தில் புயர்டோரிகா வீராங்கனை மோனிகா புய்க் 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), நாமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி கண்டு கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். 
    Next Story
    ×