search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி - டோனி இடையிலான வேறுபாடு பகல்- இரவு போன்றது: கபில்தேவ் சொல்கிறார்
    X

    கோலி - டோனி இடையிலான வேறுபாடு பகல்- இரவு போன்றது: கபில்தேவ் சொல்கிறார்

    இந்திய அணியின் விராட் கோலி, மகேந்திர சிங் டோனி ஆகியோருக்கு இடையிலான வேறுபாடு பகல்- இரவு போன்றது என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் விராட் கோலிதான், இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டிகள் ஜெயித்து கொடுத்த வெற்றி சதவீதத்தில் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மூன்று தொடர்களை வென்றதுடன், 7 வெற்றி, ஐந்து டிரா மற்றும் இரண்டு தோல்விகளை பெற்றுள்ளார்.

    தற்போதைய நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்திச் செல்வதற்கு கோலிதான் சரியான நபர் என்று இந்தியாவிற்கு முதன் முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கபில்தேவ் மேலும் கூறுகையில் ‘‘விராட் கோலி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி இடத்தை கட்டாயம் அவர் உருவாக்குவார் என்று நினைக்கிறேன். ஆனால், மற்ற யாருடைய இடத்தையும் அவர் பிடிக்கமாட்டார். அதேபோல்தான் டோனியும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். மற்ற யாருடைய இடத்தையும் பிடிக்கவில்லை.

    ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தன்னுடைய சொந்த தனித்தன்மை மற்றும் சொந்த திறன்களை வெளிப்படுத்தி தங்களுக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்குகிறார்கள் (நாம் விரைவில் முதல் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதுபோல்). டோனி பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வந்த கேப்டன் பணியை தற்போது விராட் கோலி சிறப்பாக செய்து வருகிறார்.

    டோனிக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்திச் சென்று மீண்டும் சிறந்த அணியாக உருவாக்கும் வீரரை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். விராட் கோலிக்கும் டோனிக்கும் இடையில் பகல்- இரவு இடைவெளி இருப்பதுபோல் வேறுபாடு உள்ளது என்பதை உறுதியாகச் சொல்வேன்.

    அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணியை நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று இருவரும் 100 சதவீதம் பாடுபடுகிறார்கள். ஆகவே, இரண்டு கேப்டன்கள் மற்றும் அவர்களது அணுகுமுறைகளை பார்ப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கிறது. ஆனால், இவருக்கும் உள்ள ஒரு அணுகுமுறை டெஸ்ட் போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான்’’ என்றார்.

    அஸ்வின் தனது ஆரம்ப காலத்தில் இருந்து நம்ப முடியாத அளவிற்கு விளையாடி வருகிறார். வேறு யாரும் இந்த அளவிற்கு வரமுடியுமா என்பதை என்னால் எதிர்பார்க்க முடியவில்லை. ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி 400 விக்கெட்டுக்கு மேல் குவித்துள்ளார். திடீரென அஸ்வின் புகுந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் ரன்களும் குவித்தார். இப்போதைய இந்திய அணியில் அஸ்வின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரர் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×