search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி தலைசிறந்த கேப்டன்: இந்திய அணியின் கட்டமைப்பை அவரால் மாற்ற முடியும்- பிரெட் லீ சொல்கிறார்
    X

    கோலி தலைசிறந்த கேப்டன்: இந்திய அணியின் கட்டமைப்பை அவரால் மாற்ற முடியும்- பிரெட் லீ சொல்கிறார்

    விராட் கோலி இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன். அவரால் இந்திய அணியின் கட்டமைப்பை மாற்ற முடியும் என்று பிரெட் லீ் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் பிரெட் லீ. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக திகழ்ந்தார்.

    இந்தியா தொடர்ந்து 12 டெஸ்டில் தொடர்ச்சியாக விளையாட இருக்கிறது. நாளைமறுநாள் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கான்பூரில் தொடங்குகிறது. பிரெட் லீ கூறுகையில் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் விராட் கோலி. அவரால் இந்திய அணியின் கட்டமைப்பை மாற்ற முடியும் என்றார்.

    மேலும், இதுகுறித்து பிரெட் லீ் கூறுகையில் ‘‘நியூசிலாந்து (3), இங்கிலாந்து (5), ஆஸ்திரேலியா (4) மற்றும் வங்காள சேதம் (1) ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா மோதும் 13 டெஸ்ட், அற்புதமான போட்டிகளாக இருக்கப்போகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் தனித்திறன் மற்றும் பலத்தை பரிசோதிக்கும் விதமாக இந்த 13 டெஸ்ட் போட்டிகள் அமையும்.

    விராட் கோலி அவரது தனித்திறமைகளை அணியின் வீரர்கள் மீது செலுத்துவார். அப்படி செலுத்தினால் இந்திய அணியின் கட்டமைப்பை மாற்ற முடியும். அப்படி மாற்றினால் இந்த தொடருக்குப்பின் இந்தியாவால் பெருமை அடைய முடியும்.

    இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. விராட் கோலி மிகவும் சிறந்த கேப்டன். இந்திய அணி அவருக்கு மரியாதை கொடுக்கும்.’’ என்றார்.

    தற்போதைய காலத்தின் திறமை வாய்ந்த வேகப்பநது வீச்சாளர்கள் இல்லாதது குறித்து கேட்டதற்கு ‘‘வேகப்பந்து வீச்சாளர்களை சிறந்த வகையில் உருவாக்க நாம் ஆடுகளங்களை அதற்கேற்றவாறு ஊக்குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பந்து வீச்சாளர்கள் சரியாக பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. வீரர்கள் அதிகப்படியான எடையை தூக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற பந்து வீச்சாளர்களின் பயிற்சி சரியானது என்று நான் நினைக்கவில்லை.

    நீங்கள் செய்வது சரியாக இருந்தால் மட்டுமே, ஜிம் உடற்பயிற்சி நன்றாக அமையும். எனர்ஜியை அதிக அளவில் செலவிட வேண்டும். அதே சமயத்தில் குறைந்த அளவு எடைகளை தூக்கி பயிற்சி எடுக்க வேண்டும்.

    இந்தியாவில் இருந்து 150 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் நபரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் உள்ள இளம் வீரர்களால் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீச வீரர்கள் இல்லை என்ற நிலைமை இருக்கக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×