search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா 1 கார் பந்தயம்: இத்தாலி கிராண்ட் பிரிக்சில் ரோஸ்பெர்க் வெற்றி
    X

    பார்முலா 1 கார் பந்தயம்: இத்தாலி கிராண்ட் பிரிக்சில் ரோஸ்பெர்க் வெற்றி

    பார்முலா 1 கார் பந்தயத்தின் இத்தாலி கிராண்ட் பிரிக்சில் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். ஹாமில்டன் 2-வது இடத்தைப் பிடித்தார்.
    2016-ம் ஆண்டிற்கான பார்முலா 1 கார் பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்சாக நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றான இத்தாலி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் இன்று நடைபெற்றது.

    வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற மூன்று தகுதிச் சுற்றுகள் முடிவில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்தார். சக வீரர் நிகோ ரோஸ்பெர்க் 2-வது இடம் பிடித்தார். இன்று இத்தாலி கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்றது.

    ஹாமில்டன் ‘போல்’ நிலையை அடைந்ததால் முதல் இடத்தில் இருந்து காரை கிளப்பினார். ரோஸ்பெர்க் 2-வது இடத்தில் இருந்து கிளப்பினார். இந்த போட்டியில் ஹாமில்டன் வெற்றி பெற்று அதிக முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ஹாமில்டன் தொடக்கத்தில் பின்தங்கியதால் ரோஸ்பெர்க் முதல் இடம்பிடித்து இத்தாலி கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்தார்.

    இதில் தோல்வியடைந்தாலும் ஹாமில்டன் 250 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோஸ்பெர்க் 248 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
    Next Story
    ×