search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி: நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை
    X

    3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி: நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாடியது. விராட் கோலி தலைமையிலான அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அமெரிக்காவில் நடந்த இரண்டு போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை டோனி தலைமையிலான அணி 0-1 என்ற கணக்கில் இழந்தது.

    இந்திய அணி அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணில் விளையாடுகிறது. நியூசிலாந்து அணி அடுத்த மாதம் (செப்டம்பர்) மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது. அதை தொடர்ந்து கொல்கத்தா, இந்தூரில் டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. அக்டோபர் 12-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

    அதன்பிறகு 5 ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 16-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை தர்மசாலா, டெல்லி, மொகாலி, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    நியூசிலாந்து தொடரில் பகல்-இரவு டெஸ்ட்டை நடத்த இந்தியா முதலில் திட்டமிட்டு இருந்தது. பின்னர் அந்த முடிவை கைவிட்டது. நியூசிலாந்து அணி கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியா வந்தது. 2 டெஸ்ட் கொண்ட தொடரை அந்த அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. ஆனால் இரண்டு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    Next Story
    ×