search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா 1 கார்பந்தயம்: பெல்ஜியம் போட்டியில் ஜெர்மனி வீரர் ராஸ்பெர்க் முதலிடம்
    X

    பார்முலா 1 கார்பந்தயம்: பெல்ஜியம் போட்டியில் ஜெர்மனி வீரர் ராஸ்பெர்க் முதலிடம்

    பார்முலா 1 கார்பந்தயம் பெல்ஜியம் போட்டியில் ஜெர்மனி வீரர் ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார்
    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பா- பிராங்கோர் சாம்ப்ஸ் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். இதில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 44 நிமிடம் 51.058 வினாடிகளில் முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டி சென்றார். இந்த சீசனில் அவரது 6-வது வெற்றி இதுவாகும். 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சயர்டோவும் (ரெட்புல் அணி), 3-வது இடத்தை நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லிவிஸ் ஹாமில்டனும் (மெர்சிடஸ் அணி) பிடித்தனர்.போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் ஜெர்மனியின் நிகோ ஹல்கென்பெர்க் 4-வதாகவும், மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 5-வதாகவும் வந்து முறையே 12, 10 புள்ளிகள் வீதம் தங்கள் அணிக்கு பெற்றுத்தந்தனர்.

    13 சுற்று முடிவில் ஒட்டுமொத்தத்தில் ஹாமில்டன் 232 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நிகோ ராஸ்பெர்க் 223 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். அடுத்த சுற்று போட்டி வருகிற 4-ந்தேதி இத்தாலியில் நடக்கிறது.
    Next Story
    ×