search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூ.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 3-க்கு 283
    X

    நியூ.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 3-க்கு 283

    நியூசிலாந்திற்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்டீபன் குக், குயிண்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.

    மதிய உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்து விளையாடிய டி காக் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்டீபன் குக் 56 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த அம்லா 58 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

    4-வது வீரராக களம் இறங்கிய டுமினியும் அரைசதம் அடித்தார். முதல் நான்கு பேரின் அரை சதத்தால் தென்ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்ட முடிவில்  88 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்துள்ளது. டுமினி 67 ரன்னுடனும், டு பிளிசிஸ் 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் 2 விக்கெட்டும், பிரேஸ்வெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரண்டு போட்டிகள்  கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததால், இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.
    Next Story
    ×