search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளோரிடா டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- தவான், கெய்ல் அவுட்
    X

    புளோரிடா டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு- தவான், கெய்ல் அவுட்

    அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் பொதுவான இடமான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, டோனி, பின்னி, அஸ்வின், ஜடேஜா, மொகமது சமி, பும்ப்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடித்து வரும் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ், பிளெட்சர், லெவிஸ், சாமுவேல்ஸ், சிம்மன்ஸ், பொல்லார்டு, ரஸல், பிராவோ, பிராத்வைட், நரைன் மற்றும் பத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதிரடி மன்னன் கெய்ல் அணியில் இடம்பெறவில்லை.
    Next Story
    ×