search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்: மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்
    X

    டி.என்.பி.எல்: மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற போட்டியில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரன்கள் வித்தயாசத்தில் வீழ்த்தியது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 4-வது போட்டி இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. தொடக்க வீரர் ஜெகதீசன் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 20 ஓவர்களுக்குப் பதிலாக 18 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஜெகதீசன் அரைசதம் கடந்ததுடன் அதிரடியாக விளையாடினார். அவர் 50 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 71 ரன்கள் சேர்த்து அவுட்டாக, திண்டுக்கல் அணி 18 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது. கடைசி 42 பந்தில் 58 ரன்கள் குவித்தது.

    பின்னர் விஜேடி விதியின் படி 18 ஓவரில் (108) பந்தில் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களம் இறங்கியது.

    தொடக்க வீரர் அருண் கார்த்திக் 11 பந்தில் 18 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் விக்னேஷ் 9 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த எஸ்எஸ் குமார் 21 ரன்களும், பிரான்சிஸ் ரோகின்ஸ் 20 ரன்னும் எடுத்து வெளியேறினார்கள். அதன்பின் 7-வது வீரராக களம் இறங்கிய தியாகராஜன் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினார். இறுதி வரை போராடியும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 18 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தியாகராஜன் 20 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
    Next Story
    ×