search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணி வங்காள தேசம் சென்று விளையாடுவதை விரும்பாத பீட்டர்சன்
    X

    இங்கிலாந்து அணி வங்காள தேசம் சென்று விளையாடுவதை விரும்பாத பீட்டர்சன்

    இங்கிலாந்து அணி வங்காள சேதம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.
    வங்காளதேசத்தில் ஓட்டல் மீது ஜூலை மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 20 வெளிநாட்டினர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று விளையாட தயங்கியது. பின்னர் இங்கிலாந்து அதிகாரிகள் வங்காள தேசம் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவாதம் வழங்கியதால் இங்கிலாந்து அணி வங்காள தேசம் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி, இங்கிலாந்து அணி வங்காள தேசத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இருக்கிறது.

    ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து பீட்டர்சன் கூறுகையில், நான் வங்காள தேசம் செல்ல கட்டாயம் தயக்கம் காட்டுவேன் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து பீட்டர்சன் மேலும் கூறுகையில் ‘‘வங்காள தேசத்தில் இல்லாமல் அடுத்த ஆறு வாரம் வேறு எங்காவது இருக்க விரும்புகிறேன். இளம் வீரர்களைக் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணிக்கு வேண்டுமானால் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன.

    சில வீரர்களுக்கு குழந்தைகள் மற்றும் சில பொறுப்புகள் உள்ளன. அதனால் நான் எப்படி வங்காள தேசம் செல்ல முடியும்? என்று நினைக்கலாம். அவர்கள் வங்காள தேச தொடரில் இருந்து வெளியேறவும் நினைக்கலாம். அவர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிக்கலாம். ஏராளமான பத்திரிகையாளர்கள் வங்காள தேசம் செல்ல விரும்பமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால், இந்த விஷயம் மிகவும் கடினமானது.

    டெஸ்ட் அணி கேப்டன் அலைஸ்டர் குக்கின் கடினமான முடிவுகளில் ஒன்றாக இது இருக்கப்போகிறது. நீங்கள் அங்கே போக விரும்புகிறீர்களா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், யாராவது ஒரு வீரர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவார் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் சென்றால், அனைவரும் செல்ல ஏதுவாகிவிடும். அனைவரும் தொடரில் இருந்து விலகுவது மிகவும் கடினமான ஒன்று’’ என்றார்.
    Next Story
    ×