search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யு.எஸ். ஓபன் பிரதான சுற்றுக்கு முன்னேறி சாகெத் மைனேனி சாதனை
    X

    யு.எஸ். ஓபன் பிரதான சுற்றுக்கு முன்னேறி சாகெத் மைனேனி சாதனை

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சாகெத் மைனேனி வெற்றி பெற்று முதன்முறையாக பிரதானச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஒன்றான அமெரிக்க ஓபன் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் 143-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான சாகெத் மைனேனி முதல் இரண்டு தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    3-வது சுற்றில் வெற்றி பெற்றால் அமெரிக்க ஓபனுக்கான பிரதானச் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலையில், 3-வது தகுதிச் சுற்றில் செர்பியா வீரர் பெட்ஜா கிரிஸ்டனை எதிர்கொண்டார். இதில் சாகெத் 6-3, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் அமெரிக்க ஓபனுக்கான பிரதானச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக பிரதான சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    சாகெத் அமெரிக்க ஓபன் தொடரில் 2-வது சுற்றுக்கு முன்னேறினால் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிக்குடன் மோதுவார்.

    இதற்கு முன் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பாம்ரி முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், முதல் சுற்றில் ஆண்டி முர்ரேயுடன் மோதி தோல்வியடைந்தார்.
    Next Story
    ×