search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் ஏமாற்றம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு
    X

    ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் ஏமாற்றம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் ஏமாற்றம் குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை தேசிய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது.
    புதுடெல்லி :

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லக்கூடிய பந்தயங்களில் ஒன்றாக துப்பாக்கி சுடுதல் கருதப்பட்டது. ஆனால் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உள்பட எல்லா வீரர்களும், வீராங்கனைகளும் வெறுங்கையுடன் நாடு திரும்பினார்கள்.

    இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை தேசிய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது.

    தேசிய ரைபிள் சங்க செயலாளர் ராஜீவ் பாட்டியா மற்றும் 2 பத்திரிகையாளர்கள் இந்த கமிட்டியில் இடம் பிடித்துள்ளனர். முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மனிஷா மல்கோத்ரா கமிட்டியின் கன்வீனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கமிட்டியின் கூட்டம் வருகிற 30 அல்லது 31-ந் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.

    கமிட்டி தனது அறிக்கையை 4 வாரத்துக்குள் தேசிய ரைபிள் சங்க தலைவரிடம் சமர்பிக்கும். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    Next Story
    ×