search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்பஜன் சிங்கிற்கு பெண் குழந்தை பிறந்தது
    X

    ஹர்பஜன் சிங்கிற்கு பெண் குழந்தை பிறந்தது

    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பன் சிங்கின் மனைவிக்கு லண்டனில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இவர் தனது காதலியான நடிகை கீதா பஸ்ராவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹர்பஜன் சிங் மனைவி கீதா, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஹர்பஜன் சிங்கின் தாயார் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் தாயார் அவ்தார் கவுர் கூறுகையில் ‘‘நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீதாவுடன் ஹர்பஜன் சிங் முன்னதாகவே லண்டன் சென்றார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக எனக்கு தகவல் வந்தது. இதையடுத்து மகனையும், மருமகளையும் வாழ்த்தினேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்’’ என்றார்.

    ஹர்பஜன் சிங் 417 டெஸ்ட் விக்கெட்டுக்களையும், 269 ஒருநாள் மற்றும் 25 டி20 விக்கெட்டுக்களும் சாய்த்துள்ளார்.
    Next Story
    ×