search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்டில் துணைக் கண்டத்திற்கு வெளியே மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய அணி சாதனை
    X

    டெஸ்டில் துணைக் கண்டத்திற்கு வெளியே மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய அணி சாதனை

    ஆன்டிகுவா டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது துணை கண்டத்திற்கு வெளியே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
    ஆன்டிகுவாலில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஆசியாவுக்கு வெளியே இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன்பு புலவாயோவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே ஆசியாவுக்கு வெளியே பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    ஆசியாவுக்கு வெளியே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற முதல் 3 மிகப்பெரிய வெற்றி விவரம் வருமாறு:-

    1. வெஸ்ட் இண்டீஸ்- இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் (2016 ஆண்டிகுவா)
    2. ஜிம்பாப்வே - இன்னிங்ஸ் மற்றும் 90 ரன் (2005 புலவாயோ)
    3. இங்கிலாந்து- இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் (2002 லீட்ஸ்)
    Next Story
    ×