search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓல்டு டிராஃப்போர்டு டெஸ்ட்: பாகிஸ்தான் 198 ரன்னில் சுருண்டது- இங்கிலாந்து பாலோ-ஆன் எடுக்கவில்லை
    X

    ஓல்டு டிராஃப்போர்டு டெஸ்ட்: பாகிஸ்தான் 198 ரன்னில் சுருண்டது- இங்கிலாந்து பாலோ-ஆன் எடுக்கவில்லை

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் 198 ரன்னில் சுருண்டது.
    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ரன்களும், அலைஸ்டர் குக் 105 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டும், ரஹத் அலி, மொகமது ஆமிர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா 1 ரன்னுடனும், ஷான் மசூத் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஷான் மசூத் மேலும் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஆசாத் ஷபிக் 4 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் வீழ்ந்தார். 8-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அஹமது 18 பந்தில் 26 ரன்கள் அடித்து ஸ்டோக்ஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த யாசீர் ஷாவை வோக்ஸ் 1 ரன்னில் வெளியேற்றினார்.

    மறுமுனையில் விளையாடிய மிஸ்பா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். 10-வது வீரராக களம் இறங்கிய வஹாப் ரியாஸ் 39 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணி 198 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணியை விட 391 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது.

    200 ரன்கள் குறைவாக எடுத்தாலே ஒரு அணி பாலோ-ஆன் ஆகும். 391 ரன்கள் குறைவாக இருப்பதால் இங்கிலாந்து பாலோ-ஆன் எடுத்து மீண்டும் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் பாலோ-ஆன் கொடுக்கமாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கும் என்று அறிவித்தார். அதன்படி இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

    3-வது நாள் மதிய தேனீர் இடைவேளை வரை இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. அலைஸ்டர் குக் 9 ரன்னுடனும், ஹேல்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×