search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலிக்கு வாழ்த்து சொன்னது தவறாய் போய்விட்டது: சர் விவ் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்
    X

    விராட் கோலிக்கு வாழ்த்து சொன்னது தவறாய் போய்விட்டது: சர் விவ் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்

    ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த விராட் கோலிக்கு வாழ்த்து சொன்னது தவறாய் போய் விட்டது என்று ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
    இந்தியா- வெஸ்ட் இணடீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    விராட் கோலி அபாரமாக விளையாடி 24 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் அடித்தார். இதன்மூலம் வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் தன்னுடைய தனிப்பட்ட அதிக ஸ்கோராகவும், கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவு செய்தார்.

    ஸ்லோவான ஆடுகளத்தில் நிலையாக நின்று தன்னம்பிக்கையுடன் இரட்டை சதம் அடித்ததால் அனைவரும் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வருடத்தின் முதலில் இருந்து விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நான்கு செஞ்சூரி அடித்து அசத்தினார்.

    இவரது டபுள் செஞ்சூரியை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பாவான் சர் விவ் ரிச்சட்ஸும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    முதல் டெஸ்டில் சர் விவ் ரிச்சட்ஸ் நேரடி வர்ணனை செய்து வருகிறார். இவர் பி.சி.சி.ஐ.யின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது விராட் கோலி குறித்து பேசுகையில் ‘‘நான் உங்களுக்கு ஒன்றை ஞாபயகப்படுதுகிறேன். என்னவெனில், இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆன்டிகுவா வந்தபோது, இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். அப்போது வீராட் கோலியை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் (Good Luck) கூறினேன். ஆனால், என்னுடைய சொற்கூரை இந்தை அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொண்டு டபுள் செஞ்சூரி அடித்து சாதனைப் படைப்பார் என்று நான் நம்பவில்லை.

    ஒரு பேட்ஸ்மேனாக, இதை பார்ப்பதற்கு மிகவும மகிழ்ச்சியாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டபுள் செஞ்சூரி அடித்திருந்தாலும் அவரது அருமையான ஆட்டத்தை பாராட்டியே தீர்வேன். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சதம் என்று நனைக்கிறேன்.

    சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் அவர் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்திருப்பது மிகவும் வல்லமைமிக்க பணியாகும். சிறந்த பேட்ஸ்மேன் எப்படி விளையாடினார் என்பதை பார்ப்பதற்கு இது ஒரு சிறந்ததாக இருந்தது என்று நினைக்கிறேன்.

    விராட் கோலி சதம் அடித்ததில் இருந்து இரட்டை சதம் அடிக்கும் வரை நேரில் பார்த்தது எனக்கு இதுதான் முதன்முறை. நான் வர்ணனை செய்து கொண்டிருந்ததால், அவரது ஆட்டம் முழுவதையும் பார்த்து ரசித்தேன்’’ என்றார்.
    Next Story
    ×