search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்: 3-வது நாள் உணவு இடைவேளையில் 90/3
    X

    முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்: 3-வது நாள் உணவு இடைவேளையில் 90/3

    இந்தியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் கிரேக் பிராத்வைட் 11 ரன்னுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினார்கள். இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்த கடுமையாக முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 33-வது ஓவரில்தான் அதற்கு பலன் கிடைத்தது. மிஸ்ரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பிஷூ ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 46 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து டேரன் பிராவோ களம் இறங்கினார். இவர் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் அவுட் ஆனார். முகமது ஷமி வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் பிராவோ அவுட் ஆனார். ஷமி ஆப் ஸ்டம்பிற்கு வெளியே கொஞ்சம் கூடுதலாக பவுன்சராக வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

    4-வது விக்கெட்டுக்கு பிராத்வைட் உடன் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 46 ரன்னுடனும், சாமுவேல்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஷமி இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×