search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் குறித்து விமர்சனம்: காட்லின் மீது சாடிய உசைன் போல்ட்
    X

    காயம் குறித்து விமர்சனம்: காட்லின் மீது சாடிய உசைன் போல்ட்

    உசைன் போல்ட்டின் காயம் குறித்து அவருக்கு கடும் சவாலாக விளங்கும் அமெரிக்காவின காட்லின் விமர்சனம் செய்தார். இதனால் அவர் மீது போல்ட் சாடியுள்ளார்.
    29 வயதான உசைன் போல்ட் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக திகழ்ந்து வருகிறார். 2008, 2012 ஒலிம்பிக் தொடரில் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ரியோவில் ஹாட்ரிக் சாதனை படைக்க இருக்கிறார்.

    இந்நிலையில் காயம் அவருக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறது. திடீரென காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவார். பின்னர் தகுதி பெற்று போட்டியில் கலந்து கொள்வார். அப்படித்தான் 1-ந்தேதி ஜமைக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பாதியில் வெளியேறினார். பின்னர், உடற்தகுதி பெற்று நேற்று நடைபெற்ற லண்டன் ஆண்டு விழா போட்டியில் கலந்து கொண்டு 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்டுக்கு கடும் நெருக்கடி கொடுத்து 2-வது இடம் பிடித்தவர் அமெரிக்காவின் காட்லின். 34 வயதாகும் இவர் ரியோவில் போல்டிற்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ‘‘தற்போது அங்கு என்ன நிகழ்கிறது? உசைன் போல்ட் திடீரென காயமடைகிறார். பின்னர் மெடிக்கல் சோதனையில் தகுதி பெறுகிறார். அவருடைய நாடு என்ன செய்கிறது? எங்களுடைய நாட்டில் இப்படி செய்ய முடியாது’’ என்றார்.

    இதற்கு போல்ட் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து போல்ட் கூறுகையில் ‘‘இரண்டு முறை ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி தடை பெற்ற காட்லின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது சிரிப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் இதை ஒரு நகைச்சுவையாகவே உணர்கிறேன். நான் போட்டியில் இருந்து பின்வாங்கியதாக அவர்கள் நினைப்பதை அவமரியாதையாக எண்ணுகிறேன்.

    நான்தான் சிறந்த வீரர் என்பதை வருடத்திற்கு வருடம் நிரூபித்துக்கொண்டு வருகிறேன். உடற்தகுதி பற்றி பேசியதைக் கேள்விப்பட்டு நான் சிரித்தேன். குறிப்பாக காட்லின் பேசியது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×