search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரியா கிராண்ட் பிரிக்ஸ்: ஷூமாக்கரின் சாதனையை முறியடித்தார் ரோஸ்பெர்க்
    X

    ஆஸ்திரியா கிராண்ட் பிரிக்ஸ்: ஷூமாக்கரின் சாதனையை முறியடித்தார் ரோஸ்பெர்க்

    ஆஸ்திரியா கிராண்ட் பிரிக்ஸ் பயிற்சி சுற்றில் ஒரு சுற்றை ஒரு நிமிடம் 07.373 வினாடிகளில் கடந்து 13 வருட கால ஷூமாக்கரின் சாதனையை ரோஸ்பெர்க் முறியடித்துள்ளார்.
    இந்த வருடத்திற்கான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. போட்டிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று சேர்த்து அழைக்கப்படும் (உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றால் ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ்).

    அதன்படி 9-வது சுற்றான ஆஸ்திரியா கிராணட் பிரிக்ஸ் பந்தயம் நாளை மறுநாள் (3-ந்தேதி- ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் யார் முதல் நபராக காரை ஓட்டுவது (Pole Station) என்பதை அறிவதற்காக வெள்ளிக்கிழமை இரண்டு சுற்றுகள் மற்றும் சனிக்கிழமை ஒரு சுற்று என மூன்று தகுதிச் சுற்றுகள் நடைபெறும்.

    அதனடிப்படையில் இன்று முதல் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் பெர்சிடெஸ் பென்ஸ் அணி சார்பில் நிக்கோ ரோஸ்பெர்க் மற்றும் லெவிஸ் ஹாமில்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தகுதிச் சுற்று தொடங்கியதும் சீறிப்பாயந்த ரோஸ்பெர்க் ஒரு சுற்றை ஒரு நிமிடம் 07.373 வினாடிகளில் கடந்து சாதனைப்படைத்தார். இதற்கு முன் ஷூமாக்கர் கடந்த 2003-ல் ஒரு சுற்றை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவரை விட அரை வினாடிகள் முன்னதாக வந்து ரோஸ்பெர்க் ஷூமாக்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

    லெவிஸ் ஹாமில்டன் 0.357 வினாடிகளில் ரோஸ்பெர்க்கை விட பின்தங்கினார். இதுவரை நடைபெற்றுள்ள 8 சுற்றுகள் முடிவில் ரோஸ்பெர்க் ஹாமில்டனை விட 24 புள்ளிகள் அதிகமாக உள்ளார்.

    ரோஸ்பெர்க் ஆஸ்திரேலியன், பஹ்ரைன், சீனா, ரஷியா மற்றும் ஐரோப்பியன் ஆகிய 5 சுற்றுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மொனாகோ, கனடா கிராண்ட் பரிக்ஸில் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
    Next Story
    ×