search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் முர்ரே, செரீனா வெற்றி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் முர்ரே, செரீனா வெற்றி

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றனர்.
    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றனர்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, சக நாட்டவர் லியாம் பிராடியுடன் மோதினார். இதில் அனுபவம் வாய்ந்த முன்னாள் சாம்பியன் முர்ரே 6-2, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிராடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில்  4-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 7-6 (4), 6-1, 6-7 (2), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரைட்சை போராடி தோற்கடித்தார். நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), கேஸ்கிïட் (பிரான்ஸ்), சோங்கா (பிரான்ஸ்), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), விக்டர் டிரோக்கி (செர்பியா), பெலிசியானோ லோப்ஸ் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

    பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில், `நம்பர் ஒன்' வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதி நிலை வீராங்கனை சாடிகோவிச்சை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். 1 மணி 13 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் செரீனா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில்  வெற்றி பெற்றார். செரீனா 2-வது சுற்றில் சக நாட்டவர் கிறிஸ்டினா மெக்ஹலேவுடன் மோதுகிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் சுலோவக்கிய வீராங்கனை சிபுல்கோவா தன்னை எதிர்த்த லுசிச் பரோனியை (குரோ ஷியா)  7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். இத்தாலியின் ராபர்ட்டா வின்சி, பிரான்சின் கார்சியா ஆகியோரும் 2-வது சுற்றை எட்டினர்.

    மழையால் சில ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
    Next Story
    ×